12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கோவாக்ஸின் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது- உண்மையா?

Update: 2021-05-10 09:10 GMT

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராகப் போடப்படும் தடுப்பூசி குறித்து ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. அதில் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் போட அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஒரு டிவிட் வைரலாகி வந்தது. இந்த செய்தி போலியானது என்பதை அரசாங்கம் தெரிவித்துள்ளது.


"டிவிட்டில் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குப் போட அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்ற டிவிட் வைரலாகி வருகின்றது. ஆனால் இதுபோன்ற உத்தரவை அரசாங்கம் வழங்கவில்லை," என்று PIB தனது டிவிட்டில் தெரிவித்துள்ளது. தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே தடுப்பூசி செலுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்போது இந்த வைரல் டிவிட் ஆனது, கொரோனா தொற்றின் மூன்றாம் அலை அதிகம் குழந்தைகளைப் பாதிக்கக்கூடும் என்ற செய்திக்கு மத்தியில் வைரலாகி வருகின்றது. வல்லுநர்களின் கூற்றுப்படி, கொரோனா தொற்றின் முதல் அலை அதிகம் முதியவர்களையும் மற்றும் இரண்டாம் அலை இளைஞர்களையும் மற்றும் மூன்றாம் அலை குழந்தைகளைப் பாதிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்டம்\மே 1 யில் தொடங்கப்பட்டது. தற்போது நாட்டில் இரண்டு தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவாக்ஸின் மற்றும் கோவிட்ஷீயீல்டு ஆகும்.


தற்போது ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சகம் தெரிவித்தது படி, நாடு முழுவதும் 17 கோடி நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

source: https://www.timesnownews.com/india/article/bharat-biotechs-covaxin-approved-for-children-above-12-years-centre-clarifies-on-viral-tweet/754992

Similar News