தி.மு.க சார்பு ஐ.டி-களால், "கோவில் அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 128 கிலோ தங்க நகைகள்" என பரவி வரும் வீடியோ!

திருப்பதி கோயில் அர்ச்சகர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட 128 கிலோ தங்க நகைகள்

Update: 2021-12-30 12:59 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர் ஒருவரது வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில், 128 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பதிவு:

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் எவ்வளவு தெரியுமா ??? 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள்" என்கிற வாசகங்கள் அடங்கிய வீடியோபகிரப்பட்டு வருகிறது.



குறிப்பாக திமுக சார்பு ஆதரவாளர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.




 உண்மை சர்பார்ப்பு:

திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் என பரவி வரும் வீடியோவை தேடலுக்கு உட்படுத்தி பார்த்தபோது உண்மை தெரிய வந்தது.


Full View


அந்த வீடியோவில் உள்ள நகைகள் அனைத்தும், வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜோஸ் ஆலூக்காஸ் தங்க நகைக்கடையில் இருந்து திருடப்பட்டு கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்டவை என்பது தெரிய வருகிறது.

எனவே அர்ச்சகர் வீட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படும், குறிப்பிட்ட வீடியோ காட்சி, நகைக்கடை நகைகள் மீட்கப்பட்டபோது எடுக்கப்பட்டது என்பது நமக்குத் தெளிவாகியது.

முடிவு

திருப்பதி கோயில் அர்ச்சகர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள்என பரவுகின்ற வீடியோ செய்தி தவறானது







Similar News