1983ல் இந்திரா காந்தி தலைமையில் G20 மாநாடு நடந்ததா? தன் பங்குக்கு அளந்து விடும் காங்கிரஸ்!
"40 ஆண்டுகளுக்கு முன்பு திருமதி இந்திரா காந்தி இந்தியப் பிரதமராக இருந்தபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டபோது, G20 நாடுகளின் தலைவர்கள் கூட்டம்.. இந்தியாவில் முதல் முறையாக நடைபெறுகிறது என்று நினைப்பவர்கள் கவனிக்கவும்… உலகின் பாதி நாடுகளில் இருந்து" என்ற தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
உண்மையில் இது ஜி20 மாநாடு இல்லை. 1983 மார்ச் 31ல் அணிசேரா நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் 60 நாட்டுத் தலைவர்கள் அல்லது அரசாங்கத் தலைவர்கள் உட்பட 101 நாடுகளின் பிரதிநிதிகள் இருந்தனர். இந்த நிகழ்வு 1983 மார்ச் 7-12 வரை இந்தியாவின் புது டெல்லியில் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 1983ல் அணிசேரா இயக்கம் என்ற பெயரில் கூட்டத்தை இந்திரா காந்தி தலைமையிலான அரசு நடத்தியுள்ளது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. ஆனால் அது G20 உச்சி மாநாட்டோடு தொடர்புடையது அல்ல.
2008ல் தான் முதல் G20 உச்சி மாநாடு முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது. எனவே கடந்த 1983-இல் இந்திராகாந்தி தலைமையில் G20 உச்சி மாநாடு நடைப்பெற்றதாகப் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பது தெளிவாகிறது.