2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்து வெளியான புள்ளி விவரம் -அரசுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி!

Update: 2022-10-07 13:22 GMT

தேசிய சுகாதார கணக்குகள் அமைப்பு, நாட்டின் சுகாதாரத் துறையில் செய்யப்படும் செலவுகளைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.

இந்த மதிப்பீடுகள் மிக முக்கியமானவை. ஏனெனில் அவை நாட்டின் தற்போதைய சுகாதார அமைப்பின் பிரதிபலிப்பு மட்டுமல்ல, பல்வேறு சுகாதாரம் தொடர்பான நிதி ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் அரசுக்கு உதவுகின்றன.

அவற்றை குறைத்து மதிப்பிட்டு செய்திகள் வெளியாகின. ஒரு தனியார் இந்தியப் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் சுகாதாரப் பொருளாதார வல்லுனர் ஒருவரால் முன் வைக்கப்பட்ட இந்த குற்றச்சாற்று முற்றிலும் அடிப்படை ஆதாரம் மற்றும் முகாந்திரம் இல்லாதது என மத்திய அரசு கூறியது. 

தேசிய புள்ளியியல் அமைப்பின் 2017-18ஆம் ஆண்டு தகவல்களைக் கொண்டே இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் புள்ளிவிவரங்கள் கடந்த 2014-ஆம் ஆண்டு அடிப்படையில் அமையப்பெற்றுள்ளது. 

மேலும் 2017-18 தகவல்கள் ஒரு வருடகாலமாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஆகும். அதே வேளையில் 2014 தகவல்கள் ஆறு மாத காலத்திற்குள் எடுக்கப்பட்டதாகும். காலநிலை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால், 2017-18 கணக்கெடுப்பு நிச்சயமாக முந்தைய கணக்கெடுப்பை விட வலுவானதாக இருந்தது.

இத்தகைய விமர்சனம், அவர்களின் சந்தேகத்திற்குரிய வாதத்தை முன்னெடுப்பதற்கு, தவறான இணைப்பு மற்றும் தகவல்களைத் தேர்ந்தெடுத்திருப்பது தெளிவாகத் தெரிகின்றது .

கடந்த 15 நாட்களில் பொது மக்கள் அரசு மருத்துவ சேவை வசதிகளை பயன்படுத்தியது கிட்டத்தட்ட 5% அதிகரித்துள்ளது. பொது மக்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருப்பது கிராமப்புறங்களில் 4% மற்றும் நகர்ப்புறங்களில் 3% ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் சராசரி மருத்துவச் செலவில் 20 சதவீதத்திற்கும் அதிகமான குறைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாற்று, உண்மைகள் மற்றும் நியாயமான காரணங்களைப் புறக்கணித்து மற்றவர்களுக்கு நியாயப்படுத்துவதற்கான ஒரு பொதுவான உதாரணம் என்பது தெள்ளத்தெளிவாகின்றது.

Input From: PIB

Similar News