2021-ஆம் ஆண்டில் ஹரித்வாரில் நடக்கும் மகாகும்ப மேளா நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் ஒரு புகைப்படம் குற்றச்சாட்டுடன் சமூக ஊடகத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வைரல் புகைப்படத்தின் கீழ், "இது இந்தியாவின் கும்பமேளா நிகழ்ச்சி. தற்போது உலகின் மிகப்பெரிய கொரோனா மையமாக மாறியுள்ளது. இந்திய அரசாங்கத்தின் கூற்றுப்படி இது கொரோனாவை குணப்படுத்தும்," என்று அதில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இந்த புகைப்படம் 2021 கும்பமேளா நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்ற குற்றச்சாட்டுத் தவறானது ஆகும். இந்த புகைப்படம் உண்மையில் 2019 இல் உத்தரப் பிரதேசத்தில் பிரயாக் திரிவேணி சங்கமத்தின் போது பிரயாக் கும்பத்தின் போது எடுக்கப்பட்டது.
தற்போது வைரலாகி வரும் புகைப்படம் குறித்து ஆராய்ந்த போது, பிஸ்னஸ் டுடே மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியாவில் காணப்பட்டது. இதே புகைப்படம் கும்பம் 2019 அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் காணப்பட்டது. மேலும் இந்த புகைப்படத்துக்கு "ஷாஹி ஷான்" என்று தலைப்பிடப்பட்டது.
மேலும் இதே புகைப்படம் ஜீ நியூஸ் இந்தியாவிலும் காணப்பட்டது, "பிரயாக் கும்பமேளா 2019, மிகப்பெரிய கூட்ட மேலாண்மை, துப்புரவு இயக்கம் மற்றும் ஓவிய பயிற்சி போன்றவற்றுக்காக உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது," என்று கூறப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு கொரோனா தொற்று அதிகரித்து வரும் போதிலும் கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் தற்போது வைரலாக்கப்பட்டு வரும் புகைப்படம் 2021 கும்பமேளாவில் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை. எனவே தற்போது வைரலாக்கப்பட்டு வரும் புகைப்படம் போலியானது ஆகும்.
Source - Newsmeter