2021 ஆண்டிற்கான NEET தேர்வு முறை குறித்து போலியா வைரலாகும் செய்தி - உண்மை என்ன?

Update: 2021-03-23 11:42 GMT

தற்போது மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வான NEET க்கு தேர்வுக்கு புதிய பேட்டர்ன் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. இருப்பினும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு எத்தனை வினாக்கள் கேட்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. ஆனால் தற்போது வைரலாகி வரும் புகைப்படத்தில் 2021 இல் நடக்கவிருக்கும் NEET தேர்வில் 45 கேள்விகளுக்குப் பதிலாக 50 கேள்விகள் கேட்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.



 சமூக ஊடகத்தில் வைரலாகும் புகைப்படத்தின் படி, தேர்வு எழுதும் மாணவர்கள் கொடுக்கப்பட்டுள்ள 50 கேள்விகளில் விருப்பங்களுக்கு ஏற்ப ஏதாது 45 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியானது கல்வி அமைச்சகம் இந்த ஆண்டு NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளில் சாய்ஸ் வழங்கப்படும் என்று தெரிவித்ததை அடுத்துப் பரப்பப்பட்டுள்ளது. JEE தேர்வுக்கான பேட்டர்ன் வெளியிடப்பட்டுத் தேர்வுகள் நடந்துவரும் நிலையில், இந்த ஆண்டு NEET தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான சரியான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

"இந்த ஆண்டு JEE மற்றும் NEET தேர்வுகளுக்குக் கடந்த ஆண்டை போலவே இப்பொழுதும் அதே பாடத்திட்டமே இருக்கும், ஆனால் தேர்வர்களுக்கு வினாத்தாளில் விருப்பங்கள் வழங்கப்படும். 2021 NEET தேர்வுக்கான சரியான அறிவிப்புகள் இன்னும் வெளியிடப்படவில்லை," என்று கல்வி அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தது.

அரசாங்கம் தற்போது சமூக ஊடக நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து, சமூக வலைத்தளங்களில் NEET 2021 தேர்வு குறித்துப் பரப்பப்படும் பிரசுரங்கள் தவறானது என்று தெரிவித்துள்ளது. இதுபோன்ற தளங்களை நம்பவேண்டாம் என்று மாணவர்களை அரசாங்க உண்மை கண்டறியும் குழு எச்சரித்துள்ளது.


"NEET 2021 தேர்வு பேட்டர்ன் குறித்து ஒரு செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. இது NTA மூலம் வெளியிடப்பட்ட அறிக்கைகள் இல்லை. மேலும் விவரங்களுக்கு NTA வின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சரிபார்க்கவும்," என்று PIB ட்விட்டில் தெரிவித்திருந்தது.




இந்த ஆண்டுக்கான NEET தேர்வு ஆகஸ்ட் 1 இல் நடைபெறத் திட்டமிட்டுள்ளது. மேலும் முன்னர் ஆண்டுக்கு இரண்டுமுறை NEET தேர்வு என்று அறிவித்திருந்தது இருப்பினும் சுகாதார மற்றும் கல்வி அமைச்சகத்திடம் இருந்து ஒருமித்த கருத்து கிடைக்கவில்லை என்பதால் இந்த ஆண்டு ஒரு முறை மட்டும் தேர்வு நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு மாணவர்கள் NEET தேர்வில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

Similar News