4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் ரயில் டிக்கெட் வாங்க வேண்டுமா? ஊடகங்கள் செய்த பித்தலாட்டம்!

Update: 2022-08-18 06:17 GMT

ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக அண்மையில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்று அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் செய்யவில்லை. பயணிகள் விரும்பினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்கி அவர்களுக்கு தனியாக இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கையை பெற்றுக்கொள்ளலாம்.

தனி இருக்கை அல்லது படுக்கை வசதியுடன் கூடிய இருக்கை தேவையில்லை எனில், அந்த குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்துக்கொள்ளலாம் என கூறி உள்ளது. 

Input From; Dinakaran 

Similar News