நிலக்கரி கொண்டு செல்ல ரயில்கள் ரத்து செய்ததை இஷ்டத்திற்கு திரித்து செய்தி வெளியிடும் சில ஊடகங்கள் - தோலுரிக்கும் எஸ்.ஜி சூர்யா!

Update: 2022-04-30 04:10 GMT

அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி வண்டிகள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை திரித்து சில ஊடகங்கள் செய்தி வெளியிடுவது ஆதாரத்தோடு அம்பலமானது. 



NEWS 18 போன்ற தேசிய அளவில் முன்னணியில் உள்ள ஊடகங்கள் கூட இவ்வாறு திரித்து செய்தி வெளியிட்டுள்ளன. 

உண்மை என்ன? 

நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் அனல் மின் நிலையங்களில் இருந்தே உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு விரைவாக தீர்ந்து வருகிறது. கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில் மின்சாரத்தேவை அதிகரிப்பு இதற்கு காரணமாகும்.  நிலக்கரி பற்றாக்குறையை போக்கும் வகையில் அனல்மின் நிலை யங்களுக்கு நிலக்கரி ரயில்கள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒரு சில தமிழ் ஊடகங்கள் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக செய்தி வெளியிடுகின்றன. மத்திய அரசின் திட்டங்கள் முதற்கொண்டு, இவ்வாறே திரித்து தவறாக மக்கள் மனதில் பதிய வைக்கின்றனர். இதற்கு தமிழக பாஜக ஊடக பேச்சாளர் எஸ்.ஜி சூர்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 



Similar News