61 நாட்கள் மீன்பிடித் தடை காலம்.. எப்படி பிரதமர் மோடி வருகை மீனவ மக்களை பாதிக்கும்?.

Update: 2024-06-02 03:54 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கன்னியாகுமரிக்கு வந்துதன் காரணமாக தான் தற்போது பத்தாயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரம் இன்றி தவிக்கிறார்கள் என்று சன் நியூஸ் செய்திகளை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் உண்மையில் தற்போது தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பது அனைவரும் அறிந்ததே, பிறகு எப்படி மீனவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்? அவர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும்? இது தொடர்பாக சன் நியூஸ் செய்து வெளிவிடும் பொழுது, "பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாவுத்துறை, கோவளம், சின்னமுட்டம், புதுகிராமம், ஆரோக்கியபுரம் கிராமங்களில் 1,000 படகுகள் கரையில் நிறுத்தப் பட்டுள்ளது. மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் 10,000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபப்ட்டுள்ளது" என்று குறிப்பிட்டு கூறியிருக்கிறார்கள்.


இந்த ஒரு செய்தி தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உண்மையில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருக்கும் பொழுது, எப்படி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகை மீனவ மக்களை பாதிக்கும்? அவர்களுடைய வருமானத்தை பாதிக்கும்? என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்பு வருகிறார்கள். மேலும் அவர்கள் வெளியிட்ட செய்து முற்றிலும் தவறான தகவல் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்க இந்த நாட்களில் அனுமதிக்க மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வந்துள்ளது. ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த காலகட்டங்களில் மீனவர்கள் தங்களுடைய படகுகளை சரி பார்க்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள்.

கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன்களின் இனப் பெருக்கத்திற்காகவும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் அமலப்படுத்தப் படுகிறது. இக்காலங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கான தடை ஏப்ரலில் இருந்து முதல் அமலுக்கு வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy:



Tags:    

Similar News