70% தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றியாச்சு, நாடாளுமன்றத்தில் பொய் கூறிய தி.மு.க - நிரூபிக்க முடியுயா SG.சூர்யா சவால்

Update: 2022-08-04 02:43 GMT

திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டிலேயே 70% தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த உடன் பெட்ரோல் விலை ரூ.3 குறைப்பு; பால் விலை ரூ.3 குறைத்துள்ளது என திமுக எம்.பி. திருச்சி சிவா மக்களவையில் பேசினார். 

இதனை தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் வரும் வதந்திகளை நம்பி பேச ஆரம்பித்தார். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா? வாக்குறுதி கொடுத்தது போல ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தீர்களா? மக்களை ஏமாற்றி தவறாக வழி நடத்தி உள்ளீர்கள்.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகள் தருவோம் என கூறினீர்கள். ஆனால் இன்று வேலை வாய்ப்பின்மை தான் அதிகமாக நிலவுகிறது. பொருளாதாரம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. மின் மயானங்களின் மீது 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது அறிவுரைகளை கேட்டு செயல்படுவதே அரசுக்கு அழகு என கூறினார்.

ஒட்டுமொத்தமாக தனது உரை முழுக்க பொய்யான தகவலை மட்டுமே கூறி மத்திய அரசை விமர்சிப்பது போல காட்டிக்கொண்டார். இதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா பதிலடி கொடுத்துள்ளார். 

திமுக அழித்த தேர்தல் வாக்குறுதிகள் - 505 அதில் 70 சதவிகிதம் என்றால் 353 வரும். நிறைவேற்றிய 353 வாக்குறுதிகள் எவை என வெள்ளை அறிக்கை கொடுக்க முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு திராணி இருக்கிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். 


Similar News