இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் பெயரில் பரவும் போலி செய்தி! நியூஸ் கார்டை எடிட் செய்த மர்ம ஆசாமிகள்!

தி.மு.க-வுக்கு வாக்களித்த மக்களுக்கு வருண பகவான் தண்டனை

Update: 2021-11-12 01:15 GMT

IndiaGlitz Tamil ஊடகம் ட்விட்டரில் பதிவிட்ட அர்ஜூன் சம்பத் பேட்டி தொடர்பான செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "திமுக-வுக்கு வாக்களித்த சென்னை மக்களை, மழையின் வெள்ளத்தால் வருணபகவான் தான் தண்டித்துள்ளார். அவர்களுக்கு இது தேவைதான் – அர்ஜூன் சம்பத்" என்று இருந்தது.

இந்த தகவலின் உண்மை நிலை குறித்து, சர்வதேச அங்கீகாரம் பெற்ற உண்மை கண்டறியும் செய்யும் ஊடகமான factcrescendoஆய்வு நடத்தியது. முடிவில், இந்த தகவல் போலியாக சித்தரித்து பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IndiaGlitz தமிழ் ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியானது போல் உள்ளதால், முதலில் ட்விட்டர் பக்கம் சோதிக்கப்பட்டது. அதில் முழுக்க முழுக்க சினிமா தொடர்பான செய்திகள் அதில் இருந்தன. அர்ஜூன் சம்பத் தொடர்பாக எந்த ஒரு பதிவும் கிடைக்கவில்லை. 

IndiaGlitzவெளியிடும் இது போன்ற பதிவுகளில் வீடியோ லிங்க் இருக்கும். ஆனால் அர்ஜூன் சம்பத் பதிவுக்கான வீடியோ லிங்க் இல்லை. நவம்பர் 5ம் தேதி ராசிபலன் தொடர்பான வீடியோவை வெளியிட்டிருந்தனர். அந்த வீடியோ பதிவை எடுத்து எடிட் செய்திருப்பது தெரிய வருகிறது.

ஒருவருக்கு எதிராக எதிர்மறை பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு போலியாக இந்த பதிவை மர்ம நபர்கள் உருவாக்கியிருக்கலாம் என்பது உறுதியாகிவிட்டது. மேலும், சென்னை மழை வெள்ளம் தொடர்பாக அர்ஜூன் சம்பத்தின் பேட்டி எதையும் IndiaGlitz வெளியிடவில்லை என்று தெரியவந்தது.

அர்ஜூன் சம்பத் பேஸ்புக் பக்கத்திலும், அப்படி எந்த ஒரு கருத்தையும் பதிவிடவில்லை. இறுதியாக அர்ஜூன் சம்பத் தரப்பைத் தொடர்புகொண்டு விசாரித்த போது, இது போலியாக உருவாக்கப்பட்ட பதிவு என்றும், அர்ஜூன் சம்பத் அப்படி எந்த ஒரு பேட்டியையும் அளிக்கவில்லை என்றும் உறுதி செய்தனர்.

இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது, திமுக-வுக்கு வாக்களித்த மக்களை வருண பகவான் தண்டித்துள்ளார் என்று அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதியாகிவிட்டது.






Similar News