ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயம் என பரவும் செய்தி - உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக ஆகஸ்ட் 1 முதல் வருகைப் பதிவு செய்யும் செயலியில் பதிவு செய்யாவிட்டால் அரசு ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.

Update: 2022-07-26 07:49 GMT

ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு கட்டாயம் என பரவும் செய்தி - உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக ஆகஸ்ட் 1 முதல் வருகைப் பதிவு செய்யும் செயலியில் பதிவு செய்யாவிட்டால் அரசு ஆசிரியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் இந்த செயலி மூலம் வருகையை பதிவு செய்ய‌ வேண்டும் என்றும் மீறும் பட்சத்தில் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாக தந்தி டிவி உள்ளிட்ட பல ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த தகவல் அரசு சார்பில் கல்வி துறையின் வாயிலாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இது குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், உண்மை தன்மையை அறிய தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள பள்ளிக்கல்வித் துறையை தொடர்பு கொண்டு கேட்டபோது, "ஆசிரியர்களின் வருகை பதிவை இணையதளம் மூலம் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல், செயலி மூலம் காலை 10 மணிக்குள் வருகைப் பதிவு செய்யாவிட்டால், ஆசிரியர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற செய்தி தவறானது. அப்படி எதுவும் அறிவிக்கப்படவில்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதே போல் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தந்தி டிவி வெளியிட்ட செய்தி தவறானதே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி துறையில் இருந்து எந்த அறிவிப்பும் வராத நிலையில், இச்செய்தி போலியானதாகவே உள்ளது.

Source - Youturn

Similar News