பிரதமர் தொடங்கி வைத்த சாலை மழைநீரில் அடித்து செல்லப்பட்டதா? போட்டோவில் ஊடகங்கள் செய்த பித்தலாட்டம்!

Update: 2022-07-24 01:24 GMT

உ.பி.யில் உள்ள பண்டேல்கண்ட் விரைவுச்சாலையை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 16 அன்று திறந்து வைத்தார். ஆனால் கனமழை காரணமாக புதிய விரைவுச் சாலையில் 5 நாட்களுக்குள் பெரிய பள்ளங்கள் வந்துவிட்டதாக சில மீம்கள் வைரலாகி வருகிறது.


14,850 கோடி செலவில் பண்டேல்கண்ட் விரைவுச்சாலை கட்டப்பட்டது. இதன் மூலம் சித்ரகூடில் இருந்து டெல்லிக்கு பயணம் செய்யும் நேரம் 3-4 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் பலன் இன்னும் அதிகமாகும். இந்த விரைவுச் சாலை இங்குள்ள வாகன பயணத்தை தூரிதப்படுத்துவது மட்டுமல்லாமல், பண்டேல்கண்டின் தொழில்துறை முன்னேற்றத்தையும் துரிதப்படுத்தும் என பிரதமர் கூறினார்.

சாலை திறக்கப்பட்டு சில நாட்களே ஆன நிலையில், கனமழையில் பண்டேல்கண்ட் விரைவுச்சாலையில் சில  இடங்களில் துளை உண்டானது. இதனை சீரமைக்க அந்த பகுதியில் இருந்த தார் கலவை சுரண்டி அகற்றப்பட்டு அதனை சீரமைக்கும் பணி நடந்தது. சாலை சீரமைப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்த ஊடகங்கள், மழையால்  சாலை அடித்து செல்லப்பட்டது போல சித்தரித்து செய்திவெளியிட்டு வருகின்றன. உண்மையில் சாலை சீரமைப்பின் போது எடுக்கப்பட்ட படமே, மழையால் ஏற்பட்ட சேதமாக பொய்யாக பரப்பப்பட்டுள்ளது. 






 


 


Similar News