கொரோனா மரணங்களை மறைக்க இந்திய அரசுக்கு எந்த அவசியமும் கிடையாது - உலக சுகாதார அமைப்புக்கு இந்தியா பதிலடி!

Update: 2022-04-20 01:31 GMT

கொரோனா உயிரிழப்பு குறித்த விவரங்களைப் பகிர்வதில் இந்திய அரசு ஒத்துழைப்பு தரவில்லை. உண்மையாக எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து பொதுவெளியில் வெளியிடுவதை இந்திய அரசு தடுக்கிறது  என்று உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டுவதாக அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நிறுவனமான நியூயார்க் டைம்ஸ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்தச் செய்தி இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஏற்கனவே இந்தியாவிற்கு எதிராக பலமுறை பொய் செய்தி வெளியிட்ட வரலாறு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு உண்டு, இந்தியாவைச் சேர்ந்த இடதுசாரி ஆதரவாளர்கள் அந்த ஊடகத்தில் பகுதி நேரமாக பணியாற்றுவதால், அவர்களது கருத்தை செய்தி என்ற பெயரில் வெளியிடுகின்றனர். 

அதனையும் உண்மை என்று நம்பி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கீட்டு முறை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா இறப்புகள் குறித்து வல்லரசு நாடுகள் கொடுக்கும் தரவுகளை எந்தவித மாற்றமும் இல்லாது உலக சுகாதார நிறுவனம் அப்படியே ஏற்றுக்கொள்கிறது. ஆனால், இந்தியா போன்ற சில நாடுகளிடமிருந்து கொரோனா இறப்பு எண்ணிக்கையை கணிதவியல் அடிப்படையில் தர வேண்டும் என்று கேட்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஒரே செயலை இரண்டு வகையில் பிரித்துப் பார்க்கிறது.

குறைந்த மக்கள்தொகை கொண்ட சிறிய நாடுகளில் செய்யும் கணக்கீட்டு முறை, இந்தியா போன்ற பெரும் நாடுகளுக்கு எப்படிப் பொருந்தும். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு எந்த விளக்கமும், பதிலும் தரவில்லை. கணிதவியல் கோட்பாடு முறை இந்தியாவுக்குப் பொருந்தாது. கொரோனா மரணங்களை மறைக்க இந்திய அரசுக்கு அவசியம் எதுவும் கிடையாது. ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை" என்று கூறப்பட்டுள்ளது.

Similar News