ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் சென்றாரா அமித்ஷா - சமூக ஊடகத்தில் பரவிய வீடியோவின் பின்னணி என்ன?

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பரவிய வீடியோவிற்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-09-08 12:45 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பரவிய வீடியோவிற்கு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


மும்பையில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த திங்கள்கிழமை லால்பாக் ராஜா மற்றும் முக்கிய மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை தரிசனம் செய்தார் அப்போது அமித்ஷாவின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பின்போது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸ் ஒன்று சாலையை கடக்க முடியாமல் அவசர ஒலி எழுப்பியபடியே காத்து நின்றதாக சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவியது.


தற்பொழுது இந்த வீடியோ பரவியது குறித்த விளக்கத்தை மும்பை போலீசார் மறுத்துள்ளனர். இது குறித்து அவர்கள் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 'மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வாகன அணிவகுப்பு சென்ற போது அங்கு நின்ற ஆம்புலன்ஸில் நோயாளி யாரும் இல்லை அந்த ஆம்புலன்ஸில் இருந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக சைரனை அணைக்க முடியவில்லை இது அந்த இடத்தில் பாதுகாப்பு இருந்த போக்குவரத்து போலீசாரால் சரிபார்க்கப்பட்டது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது' என விளக்கம் அளித்துள்ளனர்.


Source - Dailythanthi

Similar News