முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி புறக்கணித்தாரா? உண்மை என்ன? ஒரிஜினல் வீடியோ இதோ!

Update: 2022-07-25 01:54 GMT

தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் உறுப்பினரான சதீஷ் ரெட்டி, பதவி விலகும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரியாவிடை விழாவின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஓய்வுபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை விட 'புகைப்படம்' முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது என பிரதமர் மோடியை விமர்சித்து பதிவிட்டு இருந்தார். 

இந்த வீடியோவை பதிவிட்டு ராம்நாத் கோவிந்துக்கு பிரதமர் வணக்கம் சொல்லவில்லை என பரப்பி வருகின்றனர். 

உண்மை என்ன?

எடிட் செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடக தளம் முழுவதும் பரவியுள்ளது. ட்விட்டர் பயனர்கள் அனைவரையும் ஏமாற்றுவதற்காக போலி வீடியோக்களை வெளியிட்டதற்காக சதீஷ் ரெட்டி மற்றும் சஞ்சய் சிங் ஆகியோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. 

பதவி விலகும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தது அசல் வீடியோவில் இருந்து தெரிகிறது.

அதனை கீழே காணலாம். 


 


Similar News