அல்லாஹூ அக்பர் என கோஷமிட்ட மாணவி துபாயில் கவுரவிக்கப்பட்டாரா? பொய் சொல்லவும் ஒரு அளவுக்கு இருக்குல!

அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு வைரலான முஷ்கான் என்கிற மாணவியை கெளரவிக்கும் விதமாக அவரது புகைப்படம் மற்றும் பெயர் ஒளிர்ந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது

Update: 2022-02-14 12:51 GMT

கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சினையின்போது அல்லாஹூ அக்பர் கோஷமிட்டு வைரலான மாணவியை கெளரவிக்கும் விதமாக, துபாயின் புகழ்பெற்ற புர்ஜ் கலிபா கட்டிடத்தில் அவரது புகைப்படம் மற்றும் பெயர் ஒளிர்ந்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

"அல்லாஹு அக்பர் என்று துணிவுடன் கூறிய வீரப் பெண்மணி முஸ்கானுக்கு, உலகின் மிக உயரமான கட்டிடம்.."புர்ஜ் கலிபா"வில் முஸ்கான் கவுரவிக்கப்பட்டார்" என்ற வாசகங்கள் அடங்கிய வீடியோ பகிரப்பட்டு வருகிறது.





புர்ஜ் கலிபாவின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கங்களில், லேசர் ஷோ குறித்த வீடியோ கடந்த ஜனவரி 6, 2022 அன்று பதிவிடப்பட்டிருந்தது. அதில் மாணவி முஸ்கான் பெயர் சேர்க்கப்பட்டு எடிட் செய்தது தெரிய வந்துள்ளது.


Full View

குறிப்பிட்ட வீடியோவில் உள்ள ஒரு பகுதியை எடுத்து எடிட் செய்தே முஷ்கான் குறித்த வைரல் வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது.

குறிப்பிட்ட வைரல் வீடியோவில் புர்ஜ் கலிபா கட்டிடம் மறைந்து வீடியோ முடிவடைந்த பிறகும் முஷ்கான் என்கிற பெயர் வீடியோவில் அப்படியே இடம்பெற்றுள்ளது. கட்டிடத்திற்கும், பெயருக்கும் தொடர்பில்லாமல் பெயர் மட்டும் தனியாக வீடியோ கடைசியில் தெரிகிறது. முஷ்கானின் பெயரும் அவரது புகைப்படமும் புர்ஜ் கலிபாவின் வீடியோவில் எடிட் செய்யப்பட்டது உறுதியாகிறது.




 





 


 




Tags:    

Similar News