வீட்டுக்கு வெளியவே ஆறு ஓட வைத்த ஸ்டாலின் வாழ்க! சென்னை மழை வெள்ளத்தை வைத்து தி.மு.க-வை கேலி செய்து பரவி வரும் வீடியோ!
சென்னை மழை வெள்ளத்தை வைத்து தி.மு.க-வை கேலி செய்து பரவி வரும் வீடியோ!;
சென்னை மழை வெள்ளத்திற்கு திமுக அரசு காரணம் என்று சென்னை மக்கள் கேலி செய்வதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்க்கலாம்.
சென்னையை அடுத்த தாம்பரம், திருமலை நகரில் குடியிருப்பு பகுதி முழுக்க, மழை நீர் சூழ்ந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். அதுபற்றி சன் நியூஸ் வெளியிட்ட செய்தியில் பேசும் பொதுமக்களில் ஒருவர், ''வெள்ளம் பாய்ந்து ஓடும்படி செய்ததற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி,'' எனக் கூறி, கேலி செய்யும் பாங்கில் பேசுகிறார்.
இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறிந்து ஆராய்ந்த பொழுது, வீடியோ மட்டும் சன் நியூஸ் ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, பொதுமக்கள் பேசுவது போல இன்னொருவர் பேசி ஆடியோ இணைக்கப்பட்டு பரவவிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
கீழே உள்ள வீடியோவில் பேசும் நபரின் உண்மையான குரல் வேறாகவும், அவர், மழை, வெள்ளம் பற்றி கவலை தெரிவிக்கும் வகையில் பேசுவதையும் காண முடிகிறது. எனவே, இந்த வீடியோவை எடுத்து, அதன் குரல் பதிவை நீக்கிவிட்டு, புதிய குரல் பதிவை சேர்த்து, இவ்வாறு வதந்தி பரப்பியுள்ளனர், என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
InputCredit: factcrescendo