2ஜி ஊழலே இல்லாதது போல சித்தரிக்கும் ஊடகங்கள்! தனிப்பட்ட காரணத்திற்காக முன்னாள் சிஏஜி மன்னிப்பு கேட்டதை திரித்து வெளியிடுவது அம்பலம்!

தனிப்பட்ட காரணத்திற்காக முன்னாள் சிஏஜி மன்னிப்பு கேட்டதை திரித்து வெளியிடுவது அம்பலம்!

Update: 2021-10-29 00:45 GMT

2ஜி அலைக்கற்றை விற்பனை விஷயத்தில் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் பற்றி தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும் அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி-க்கு எதிராக கூறிய தகவலுக்கு தான் மனிப்பு கேட்டாரே தவிர, 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து வெளியிட்ட தகவல் பற்றி அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஒரு சில ஊடகங்கள் 2ஜி அலைக்கற்றை ஊழலே இல்லாதது போல செய்தி வெளியிட்டு வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2ஜி அலைக்கற்றை உரிமங்களை மிக் குறைவான உரிமக் கட்டணத்துக்கு விற்றதால் அரசாங்கத்துக்கு 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் குறிப்பிட்டதன் மூலம் இந்திய அரசியலில் மிகப் பெரிய சூறாவளி ஏற்படக் காரணமாக இருந்தவர் வினோத் ராய்.

இந்த 2ஜி அலைக்கற்றை விற்பனை தொடர்பான தமது தணிக்கை அறிக்கையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயர் இடம் பெறாமல் இருக்க காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் நெருக்கடி கொடுத்ததாக தொலைக்காட்சி, செய்தித் தாள்களுக்கு தான் அளித்த பேட்டி உண்மைக்குப் புறம்பானது என்றும் தவறுதலாக அப்படிக் கூறிவிட்டதாகவும் எழுத்து மூலமாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் வினோத் ராய்.

வினோத் ராய் பேச்சை எதிர்த்து சஞ்சய் நிருபம் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு எழுத்து மூலமாக வினோத் ராய் சமர்ப்பித்த வாக்குமூலத்தை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் சஞ்சய் நிருபம். இருவருக்கும் இடையிலான இந்த முரண்பாட்டை வைத்து, 2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து தான் தெரிவித்த கருத்துக்கு வினோத் ராய் மன்னிப்பு கேட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.


Similar News