தற்காலிக கொரோனா திட்டம் ரத்து செய்யப்படுவதை, ரேஷன் திட்டமே ரத்து செய்யப்பட்டது போல செய்தி பரப்பும் தமிழக ஊடகங்கள்!

80 crore people across the country under PM-GKAY

Update: 2021-11-14 11:00 GMT

கொரோனா வைரஸ் பரவலின் போது, இந்தியாவில், ரேஷன் அட்டை வைத்திருக்கும் சுமார் 80 கோடிக்கும் மேலான மக்களுக்கு பயனளிக்கும் வகையில், Pradhan Mantri Garib Kalyan Package (PMGKP) என்ற பெயரில், ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, 1 கிலோ பருப்பு, தானியங்கள் போன்றவை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு மட்டுமே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக, தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் 2020 ஆண்டு முழுவதுமே தொடர்ந்த நிலையில், இந்த சலுகை திட்டத்தை 2020 நவம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக, மத்திய அரசு கூறியிருந்தது. பின்னர், படிப்படியாக, நீட்டித்து, தற்போது 2021 நவம்பர் வரை அமல்படுத்தியுள்ளது.




 


கோவிட்-19 நோய்த் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பல்வேறு பொருளாதார சங்கடங்களை ஏழைகள் எதிர்கொள்வதற்கு உதவும் வகையில் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டம் அமல்படுத்தப் படுகிறது. பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ள ஏழைக் குடும்பம் அல்லது ஏழைகள் யாரும், உணவு தானியம் கிடைக்காமல் துன்புறக் கூடாது என்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 80 கோடி தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டத்தின் படியான குடும்ப அட்டைகள் வைத்திருக்கும் பயனாளிகளுக்கும் பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் கூடுதல் உணவு தானியங்களை வழங்குவதற்கான கொள்கை முடிவை, உணவு மற்றும் பொது விநியோகத் துறை எடுத்துள்ளது.

நாட்டில் இயல்பு நிலை படிப்படியாக திரும்ப தொடங்கியுள்ளதால், நவம்பர் 30, 2021 உடன் நிறுத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனைப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டு, ஒட்டுமொத்தமாக ரேஷனில் உணவுப் பொருள் விநியோகமே நடக்காது என, தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.





Similar News