FactCheck: வைரல் வீடியோ - இந்துக் கோவில் தாக்கப்பட்டது மேற்கு வங்காளத்திலா?

இந்து சிலைகளை இரும்பு மற்றும் மரக் கம்பிகளால் உடைத்து, இந்த சம்பவத்தை தங்கள் மொபைல் போன்களால் சபடமெடுக்கிறது.;

Update: 2021-08-11 06:24 GMT
FactCheck: வைரல் வீடியோ - இந்துக் கோவில் தாக்கப்பட்டது  மேற்கு வங்காளத்திலா?

ஆக்ரோஷமான கும்பல் ஒன்று, ஒரு இந்து கோவிலை தகர்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் அதிகம் பகிரப்படுகிறது. மேற்கு வங்கத்தில் இந்த சம்பவம் நடந்ததாக விளக்கங்களுடன் பகிரப்பட்டு வருகிறது. பகிரப்பட்ட வீடியோவில், கும்பல் கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து, இந்து சிலைகளை இரும்பு மற்றும் மரக் கம்பிகளால் உடைத்து, இந்த சம்பவத்தை தங்கள் மொபைல் போன்களால் சபடமெடுக்கிறது.

ஒரு ஃபேஸ்புக் பயனர் இந்த கிளிப்பை வெளியிட்டு ஹிந்தியில், "रोहिंग्या मुस्लिम समुदाय की बस नजदीक नजदीक नजदीक का हिंदू पश, चिम्चिम बंगाल, भारत". (ரோஹிங்கியா முஸ்லீம் சமூகத்தின் குடியேற்றத்திற்கு அருகில் உள்ள இந்து கோவில், மேற்கு வங்காளம், இந்தியா.)


Full View



Full View


இது உண்மையா?

இந்து கோவில் தாக்கப்பட்ட சம்பவம் உண்மை எனினும், இந்த சம்பவம் நடந்த இடம் மேற்கு வங்களமல்ல, பாகிஸ்தானின் பஞ்சாப். டான் செய்திகளின் படி, ரஹிம் யார்கான் மாவட்டத்தின் போங் நகரில் புதன்கிழமை, ஒரு கும்பல் கோயிலைத் தாக்கியது. குச்சிகள், கற்கள் மற்றும் செங்கற்களால் அந்தக் கோவில் தாக்கப்பட்டது. கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது மற்றும் சிலைகள் சிதைக்கப்பட்டன. மதர்சா அருகே சிறுநீர் கழித்த எட்டு வயது சிறுவன் பெயிலில் விடுவிக்கப்பட்டதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த கும்பல் கூறியுள்ளது.




Tags:    

Similar News