FactCheck: பைக்கில் சென்றவர் துரத்தப்பட்டு கைது செய்யப்படும் வைரல் வீடியோ ஸ்ரீநகரிலா?

Update: 2021-08-17 00:00 GMT

சுதந்திர தின விழாவிற்காக நாடு முழுவதும் குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே பல என்கவுண்டர்கள் நடந்தன.

சமூக ஊடகங்களில், ஸ்ரீநகர் காவல்துறையினர் ஒரு பயங்கரவாதியை கைது செய்வதைக் காட்டுவதாகக் கூறி, ஒருவர் கைது செய்யப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வீடியோவில் ஒரு போலீஸ், ஜீப் மோட்டார் சைக்கிளைத் இடித்துச் சென்றது, பின்னர் ஒரு போலீஸ்காரர் பைக் ஓட்டுநர் மீது உதை விட்டு, அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளினார்.



இது உண்மையாக ஸ்ரீநகரில் நடந்ததா?

இல்லை. இந்த வீடியோ பிரேசிலிலிருந்து வந்ததே தவிர ஸ்ரீநகரில் நடந்தது இல்லை.

ஆகஸ்ட் 2, 2021 தேதியிட்ட செய்தியின் படி, பிரேசிலின் உமுராமா நகரில் உள்ள பெரோலா பகுதியில் ரோந்து சென்ற போலீசாரால் மோட்டார் சைக்கிள் துரத்தப்பட்டது. 17 வயதான அந்த இளைஞரை பைக்கை நிறுத்துமாறு போலீசார் கேட்டதாகவும், ஆனால் அவர் தப்பிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. யூ-டர்ன் எடுக்கும்போது போலீஸ் வாகனம் மீது பைக் மோதியது, பின்னர் பைக் ஓட்டுனரை போலீசார் கைது செய்தனர்.

இதே தகவலை பிரேசிலிய ஊடகங்களின் பல வலைத்தளங்கள் மற்றும் கட்டுரைகளில் காணலாம்.

கிடைத்த ஆதாரத்திலிருந்து, அந்த வீடியோ ஸ்ரீநகரைச் சேர்ந்தது அல்ல, பிரேசில் என்பது தெளிவாகிறது.

Tags:    

Similar News