இதெல்லாம் எதுக்கு ராசா? மு.க.ஸ்டாலினுக்கு ஐநா சபை பாராட்டு எனக் கூறி பகிரப்படும் போலி செய்தி!
fake-news-being-shared-that-un-greeted-mk-stalin
சமீபத்திய பேஸ்புக் பதிவில், யூடியுப் சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றின் லிங்கை ஷேர் செய்துள்ளனர். அந்த வீடியோவில், ஆதாரங்கள் அல்லது மேற்கோள் எதுவும் காட்டாமல் மு.க.ஸ்டாலினைப் பாராட்டி ஐநா சபையில் பேச பரிந்துரைக்கலாம் என்று சிலர் பேசி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தலைப்பில் ஐநா சபை பாராட்டி விட்டதாகக் கூறியுள்ளனர். இதனை பலரும் உண்மை என நம்பி, தவறாகப் புரிந்துகொண்டு, ஷேர் செய்து வருகின்றனர்.
இந்த யூடியுப் வீடியோவை உண்மைச் செய்தி என தவறாகப் புரிந்துகொண்டு, முரசொலி ஊடகம் கூட செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல, விடுதலை நாளிதழ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனை பகிர்ந்துவிட்டு, பிறகு தவறை புரிந்துகொண்டு, செய்தியை நீக்கிவிட்டது.
நடக்காத ஒரு செய்தியை நடந்தது போல குறிப்பிட்டு, தவறான தலைப்பு வைத்து பகிர்ந்து, ஏராளமானோரை குழப்பியுள்ளனர் என்று சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.
.