ஸ்டாலின் பிரதமர் ஆன பிறகு தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா? அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக வைரலாக பரவும் தகவல்!
fake news card about minister kn nerhu
மு.க.ஸ்டாலின் பிரதமரான பிறகு வேண்டுமானால் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "அமைச்சர் சர்ச்சை கருத்து. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இது சரியான தருணம் அல்ல. தளபதி பிரதமர் ஆனா பிறகு வேண்டுமானால் முயற்சி செய்கிறோம் அமைச்சர் கே.என் நேரு" என்று இருந்தது. இந்த பதிவு பிப்ரவரி 14ம் தேதி பதிவிட்டப் பட்டிருந்தது. இதனை பலரும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டு பிப்ரவரி 12ஆம் தேதி வெளியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் அமைச்சர் நேரு இவ்வாறு கூறியதாக எந்த செய்தியும் இல்லை. உண்மையில் அப்படிக்கூறியிருந்தால் எல்லா ஊடகங்களிலும் அது தொடர்பான செய்தி வந்திருக்கும். ஆனால் அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
வைரலான நியூஸ் கார்டில் உள்ள டிசைன், தந்தி டிவி வழக்கமாகப் பயன்படுத்தும் நியூஸ் கார்டுடன் ஒத்துப்போகவில்லை. மேலும், "பிரதமர் ஆன பிறகு" என்று சொல்வதற்குப் பதில் "பிரதமர் ஆனா பிறகு" என்று பிழையாக இருந்தது.
மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆன பிறகு வேண்டுமானால் சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சிக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியதாக பரவும் நியூஸ் கார்டு வேறு ஒரு கார்டை எடிட் செய்து உருவாக்கப்பட்டது என உறுதி செய்யப்படுகிறது.