தி.மு.க-வின் மோசடிகளை தட்டிக்கேட்டால், முன்னாள் முதல்வரை இப்படியா அசிங்கப்படுத்துவாங்க? கீழ்தரமாக விமர்சித்து பரவி வரும் செய்தி!
எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. அதில், "பொங்கல் தொகுப்பு பொருட்கள் சரியில்லை: ஈபிஎஸ். வெல்லத்தை உண்டு தனக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதை பாலிதீன் பையில் கொண்டு வந்ததால் சலசலப்பு. பணமாகக் கொடுத்திருந்தால் இந்த சிரமம் ஏற்பட்டிருக்காது. – எடப்பாடி கே.பழனிசாமி" என்று கீழ் தரமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை சரிபார்ப்பு:
இந்த நியூஸ் கார்டு டிசைன் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல இல்லை. ஜனவரி 11ஆம் தேதி இதே போல வேறு ஒரு நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதில், "ரேசனில் தரப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் தரமற்றதாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கமிஷன் அதிகமாக கிடைக்கும், என்பதால் ரேசன் பொருளை வெளிமாநிலத்தில் வாங்கியுள்ளனர். – அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி" என்று இருந்தது.அதனை எடிட் செய்து முன்னர் குறப்பிட்ட கீழ் தரமான வாசகத்தை இணைத்து பரப்பி வருகின்றனர்.
முடிவு:
தமிழ்க அரசு வழங்கிய பொங்கல் பொருட்களைச் சாப்பிட்டு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாகவும், அதை பாலிதீன் பையில் பிடித்து வந்து எடப்பாடி பழனிசாமி காட்டினார் என்று பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது. இதனை உண்மை என யாரும் பகிர வேண்டாம்.