சபரிமலை "அரவண பாயாசம்" இஸ்லாமிய நிறுவனத்தால் தயாரிக்கப்படுவதாக பரவும் தகவல்!

சபரிமலை அரவண பாயாசம் தயாரிப்பதை இஸ்லாமியர்களிடம் ஒப்படைத்ததா கேரள அரசு?

Update: 2021-11-23 15:50 GMT

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதமான அரவண பாயாசம் தயாரிப்பு மற்றும் விற்பனை உரிமத்தைத் துபாயைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனத்துக்கு கேரள அரசு வழங்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அதன் உண்மை தன்மை குறித்து பார்க்கலாம்.

அரவண பாயாசம் என்பது சபரி மலை ஐயப்பன் கோவிலில் மட்டும் தயாரிக்கப்படுவதில்லை. பல்வேறு இனிப்பு கடைகளிலும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சபரிமலையில் விற்பனை செய்யப்படும் அரவண பாயாசத்தின் தயாரிப்பு மற்றும் விநியோகத்தை சபரிமலைக் கோவிலே மேற்கொள்கிறது. வேறு எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும் தயாரிப்பு உரிமம் வழங்கப்பபடவில்லை. மற்ற சில கடைகள் அரவண பாயசத்தை தயாரித்தாலும் உண்மையான அரவண பாயாசம் சபரிமலையில்தான் தயாரிக்கப்படுகிறது.

அரவண பாயாசம் தயாரிப்பதாக கூறப்படும், Al Zahaa Sweets LLCஐக்கிய அரபு எமிரேட்டில் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் பல்வேறு வகையான இனிப்புகள், காரம், டெசர்ட், அரேபிய இனிப்பு வகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறது.

அவர்களுடைய தயாரிப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுக்க விற்பனையாகிறது. அவர்கள் தயாரிப்பில் விற்கப்படும் பிரபலமான அரவண பாயாசம் எந்த ஒரு மதம், சாதி, நம்பிக்கையுடன் தொடர்புடையது இல்லை.



சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கும் இந்த அரவண பாயாசத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரவண என்பதற்கு "கூழ்" என்று அர்த்தம். இது ஹலால் செய்யப்பட்ட உணவும் இல்லை என்பதை அந்நிறுவனமே உறுதிபடுத்தியுள்ளது.

InputCredit: factcrescendo


Tags:    

Similar News