ஜம்முவில் கைதான தீவிரவாதி பாஜக-வின் முன்னாள் ஐடி விங் தலைவர் என செய்தி வெளியிட்ட ஊடகங்கள் - வெளியான பின்னணி!

Update: 2022-07-05 09:55 GMT

காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்திலுள்ள துக்சன் தோக் கிராமத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் புல்வாமாவைச் சேர்ந்த பைசல் அகமது தார், ராஜாவுரியைச் சேர்ந்த தாலிப் ஹுசைன் ஆகிய இரு தீவிரவாதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு தீவிரவாதிகளில், ஹுசைன் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட தீவிரவாதி காசிமுடன் தொடர்ந்து தொடர்பிலிருந்தார், மேலும் ரஜோரி மாவட்டத்தில் குறைந்தது மூன்று குண்டுவெடிப்பு வழக்குகளில் ஈடுபட்டிருக்கிறார்.

மேலும், கைதுசெய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரான தலிப் ஹுசைன், பா.ஜ.க-வில் இணைந்ததாகக் கூறப்படுகிறது. ஜம்மு மாகாணத்தின் சிறுபான்மை மோர்ச்சாவின் ஐடி மற்றும் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாஜக விளக்கம்:

சில ஆண்டுகளுக்கு முன்பு, தாலிப் ஹுசைன் தனது மூன்று கூட்டாளிகளுடன் பாஜக அலுவலகத்திற்கு ஊடகவியலாளர் போல் வருவார். அங்குள்ளவர்களை பலமுறை பேட்டி கண்டார். அவர் தன்னை 'நியூ செஹர் இந்தியா' என்ற யூடியூப் சேனலின் நிருபர் என்று அழைத்துக் கொண்டார். பின்னார் கட்சியில் இணைவதாக கூறி சில விவரங்களை தெரிந்து கொண்டு 18 நாள்கள் மட்டுமே கட்சியில் உறுப்பினராக இருந்தார் என கூறப்பட்டுள்ளது. அதுவும் சதி செயல்களில் ஈடுபடவும், பாஜக தலைவர்களை கூறி வைக்கவும் அவ்வாறு செய்ததாக பின்னர் தெரிய வந்தது. அதனை திரித்து ஊடகங்கள் கைதான தீவிரவாதி பாஜக-வின் முன்னாள் ஐடி விங் தலைவர் என செய்தி வெளியிட்டு வருகின்றன. 

Input From: live mint

Similar News