G7 மாநாட்டில் தனிமைப்படுத்த அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு - வைரல் செய்தி உண்மையா?

Update: 2021-05-11 02:38 GMT

சமீபத்தில் நடந்த G7 மாநாட்டில் கலந்து கொண்ட சில இந்திய பிரதிநிதிகளுக்குகொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்துவிட்டதாக ஒரு வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகின்றது. மேலும் அந்த வீடியோவில் ஒரு பகுதியில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்க்கென் மற்றும் பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ப்ரீதி படேல் ஆகியோரை சந்திக்கத் தனிமைப் படுத்திக்கொள்ளும் விதிமுறைகளையும் அவர் மீறியதாகக் கூறப்பட்டிருந்தது.


இந்த வைரல் குற்றச்சாட்டானது போலியானது என்பதை BOOM தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதிநிதிகளுக்குத் தொற்று உறுதியாவதற்கு முன்பே ஜெய்சங்கர் பிளிங்க்கென் மற்றும் படேலை சந்தித்தார்.

மேலும் இந்த வீடியோவை பகிர்ந்த டிவிட்டர் பயனாளர் ஒருவர், இந்தியர்கள் G7 இல் கவனக்குறைவாக நடந்து கொள்கின்றனர். இவ்வாறு அவமதித்து நடந்து கொண்டதால், அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வீடியோவானது பிரிட்டிஷ் செய்தி நிறுவனத்தின் பகுதியில் தொடங்கப்பட்டது. அந்த வீடியோவானது G7 மாநாட்டு குறித்துப் பேசப்பட்டது, அதில் இந்தியப் பிரதிநிதிகள் மற்றும் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அந்த வீடியோவில் சிலமணி நேரத்திலே பல மாற்றங்கள் மற்றும் குரல் மாற்றங்கள் காணப்பட்டது.

அந்த மாற்றக் குரல் பதிவில் S ஜெய்சங்கர் தனிமைப் படுத்திக் கொள்ள மறுத்ததாக மற்றும் விதிமுறைகளை மீறியதாகக் கூறப்பட்டிருந்தது. இது குறித்து SKY நியூஸ் அறிக்கையைப் பார்த்த போது, இந்த வீடியோவில் G7 மாநாடு குறித்த முந்தைய பகுதி மட்டுமே இருந்தது.

Full View

ஜெய்சங்கர் தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்ததாகக் கூறப்படும் எந்த செய்தியும் அதில் காணவில்லை. மேலும் பார்வையாளர்களைத் தவறாக வழிநடத்துவதற்காகவும் மற்றும் வீடியோ மாற்றம் செய்யப்பட்டது கண்டறியக் கூடாது என்பதற்காகவும், ஸ்கை நியூஸின் முந்தைய பகுதியை எடுத்து மார்பிங் செய்துள்ளனர்.


எனவே, ஜெய்சங்கர் மற்றும் மூன்று உறுப்பினர்களும் மே 5 இல் தனிமைப்படுத்திக் கொண்டனர் மற்றும் மே 3 இல் படேல் மற்றும் பிலின்க்கனை சந்தித்தார். மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், ஜெய்சங்கர் மாநாட்டில் கலந்துகொண்டார். எனவே தற்போது ஜெய்சங்கர் தனிமைப்படுத்திக் கொள்வதை மறுத்துவிட்டார் என்று கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டுத் தவறானது ஆகும்.

Source: BOOM 

Tags:    

Similar News