Fact Check: இந்திய ராணுவ வீரர்கள் 'சரணடைந்த' புகைப்படங்கள்- சீனப் பிரச்சாரமா?
ட்விட்டர் மூலம் சீனப் பிரச்சாரத்தை நெட்டிசன்கள் விரைவாக முறியடித்தனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று (நவம்பர் 7), சீன அரசு ஊடகம், கடந்த ஆண்டு ஜூன் 15 அன்று இந்தியப் படைகளுக்கும், சீன மக்கள் விடுதலை இராணுவத்திற்கும் (PLA) இடையே நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலின் கையாளப்பட்ட (recreated) படங்களை வெளியிட்டது. சீன பத்திரிக்கையாளரால் வெளியிடப்பட்ட இப்படங்கள், ஆதிக்கம் செலுத்தும் சீனத் தரப்புக்கு முன்பாக இந்திய இராணுவம் முழுமையாக சரணடைவதைக் குறிக்கும் வகையில் மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க்கின் (CGTN) இன்டர்நேஷனல் நியூஸ் எடிட்டர் ஷென் ஷிவே, ஒரு ட்வீட்டில், "கடந்த ஜூன் மாதம் நடந்த கால்வான் மோதலின் புதிய படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன, இது சீன PLA ஆல் கைப்பற்றப்பட்ட சரணடைந்த இந்திய வீரர்களைக் காட்டுகிறது." என்று கூறினார்.
ஆனால் ட்விட்டர் மூலம் சீனப் பிரச்சாரத்தை நெட்டிசன்கள் விரைவாக முறியடித்தனர். ஒரு Twitter பயனர் (@Rahhul_Kumar_) ஷென் ஷிவே வெளியிட்ட படங்களில் பல முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார். அவர் 6 விஷயங்களை அடிக்கோடிட்டுக் காட்டினார், இது படம் டிஜிட்டல் முறையில் சிதைக்கப்பட்டது என்று தெளிவாகக் காட்டுகிறது.
"அந்த சிப்பாயின் காலணியைப் பாருங்கள். அது நமது வீரர்கள் அணிவது போல் தெரியவில்லை. ஒரு INSAS கூட லோட் செய்யப்படவில்லை. ஜாக்கெட் மற்றும் பேன்ட் மற்ற வீரர்களுடன் பொருந்தவில்லை... கிட்டத்தட்ட ஒவ்வொரு சிப்பாய்களும் வெவ்வேறு வகையான ஜாக்கெட் அணிந்துள்ளனர்... ஒரு நடிகர்/சிப்பாய் ஸ்வெட்டர் அணிந்திருப்பதைக் காணலாம்..." என்று கூறுகிறார்.