கடமைக்கு வெளியிடப்பட்ட உலக பட்டினி குறியீடு - இந்தியாவை திட்டமிட்டே சிறுமைபடுத்த முயற்சி!

Update: 2022-10-20 02:02 GMT

சர்வதேச அளவில் உணவுப் பற்றாக்குறை, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து ஆண்டுதோறும் உலகப் பட்டினி குறியீடு வெளியிடப்படுகிறது. 

அதுவும் தனியார் நிறுவனங்கள் எடுக்கும் சர்வே இது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த 'வெல்ட் ஹங்கர் ஹில்பே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

2022ம் ஆண்டுக்கான பட்டியலில், 121 நாடுகளில் இந்தியாவுக்கு, 107வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இந்தியா 101வது இடத்தில் இருந்தது.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சர்வே எடுக்கும் விதமே தவறு என்று கூறுகிறது. பட்டினி குறியீடு குழந்தைகளின் உடல்நிலை சார்ந்து வெளியிடப்படுகிறது. 

இந்தியா 50சதவிகிதம் இளைய தலைமுறையினரை கொண்ட நாடு, மற்ற நாடுகளில் வயோதிக மக்களே அதிகம். அப்படி இருக்கையில் குறிப்பிட்ட வயதினரை வைத்து சர்வே எடுத்து, ஒரு நாட்டின் நிலையை கணிப்பது தவறு. 

கடந்த வருடமே உரிய முறையில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதில்லை என்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தும் பழைய முறைப்படியே பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

மிகப் பெரிய நாட்டில், குறிப்பிட்ட 3,000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி, மொத்த நாட்டின் நிலையாக உருவகப்படுத்தியுள்ளனர்.

நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கும் உரிய உணவு பொருட்கள் கிடைக்க அரசு எடுத்து வரும் நேர்மையான முயற்சிகளை, இந்தக் கருத்துக் கணிப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

நாட்டில் உள்ள உண்மையான கள நிலவரத்தை தெரிந்து கொள்ளாமல், அரசின் முயற்சிகளை கருத்தில் கொள்ளாமல், வேண்டுமென்றே தவறான நோக்கத்துடன், தவறான வழியில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

பட்டினி குறியீடு குறித்த குளறுபடிகளை மேலும் விளக்கமாக புரிந்துகொள்ள பின்வரும் வீடியோவை காணலாம். 


Full View


Similar News