இது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? தி.மு.க எம்.பி திருச்சி சிவாவின் வீடியோ வெளியானது!
திமுகவினர் இந்தி கொள்கையில் மக்களை ஏமாற்றி வருவதாக கூறியுள்ள திருச்சி சிவாவின் மகனும் பாஜகவின் ஓபிசி பிரிவின் மாநில செயலாளருமான சூர்யா சிவா, இதற்கு ஆதாரமாக தனது தந்தையின் வீடியோவையே ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
அதில், திமுக தலைவர்களின் கொள்கை சான்று . மக்கள் இனி ஏமாற தயாராக இல்லை. உங்கள் மொழி அரசியல் இனி தமிழ்நாட்டில் எடுப்படாது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வீடியோவில், தனக்கு இந்தி தெரியாது என்று திருச்சி சிவா கூறும் வீடியோவையும், இந்தியில் அவர் பாட்டு பாடுவது போன்ற வீடியோவை சூர்யா சிவா இணைத்து பதிவிட்டுள்ளார்.