ரூ 50 லட்சம் முதல் 1 கோடி வரை கொடுத்தால் உங்கள் பிறந்த நாள் வாழ்த்துகளை கூட துபாய் புர்ஜ் கலீஃபாவில் ஒளிபரப்பமுடியும்!

How much it costs to get your ad to light up Burj Khalifa

Update: 2022-03-26 05:34 GMT

முதல்வராகப் பதவியேற்ற பிறகு, பேரன், பேத்திகள், மருமகன் உடன் துபாய் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல் மரி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் தானி பின் அகமது அல் ஜெய்யுதி ஆகியோருடன் கலந்துரையாடினார். 

துபாய் எக்ஸ்போவில் தமிழ்நாடு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இருந்து தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய அழகான காணொளி ஒளிபரப்பப்பட்டது.

Full View

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றிய அந்த அழகிய காட்சிப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலினின் முயற்சியால், துபாய் அரசே இதற்கான ஏற்பாடுகளை செய்ததாக திமுகவினர் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் இந்திய மதிப்பில் 50 லட்சம் ரூபாய்க்கு குறைவில்லாமல் பணம் கொடுத்தால், உங்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூட புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் ஒளிபரப்பமுடியும். 

லைட்டிங் காட்சிகளை நிர்வகிக்கும் மார்க்கெட்டிங் ஏஜென்சியின் படி, புர்ஜ் கலிஃபாவின் முகப்பில் விளம்பர விளம்பரம் அல்லது செய்தியை வைப்பதற்கான செலவு AED250,000 ($68,073) முதல் மூன்று நிமிட காட்சிக்கு தர வேண்டும். 

  • வார நாட்களில் இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலான மூன்று நிமிடங்களுக்கு AED250,000
  • வார இறுதி நாட்களில் AED350,000 வரை உயரும்.
  • இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலான இரண்டு மூன்று நிமிட இம்ப்ரெஷன்களுக்கு விலை AED500,000 

காட்சிகள் துபாயை தளமாகக் கொண்ட மார்க்கெட்டிங் ஏஜென்சியான Mullen Lowe MENA ஆல் நிர்வகிக்கப்படுகிறது. 

விளம்பரம் நேரலைக்கு நான்கு வாரங்களுக்கு முன் வீடியோ சமர்ப்பிக்க வேண்டும்.


Similar News