15 லட்சம் கொடுப்பதாக பிரதமரின் வாக்குறுதி உண்மையா? செய்தியை திரித்து வெளியிடும் தி.மு.க நாளேடுகள்!
பிரதமர் கருத்துக்களை செய்தியை தவறாக திரித்து வெளியிடும் தி.மு.க ஆதரவு நாளேடுகள் ஆன முரசொலி, தினகரன்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் தற்போதைய நிலைமை பற்றி பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார். குறிப்பாக நாம் கருப்புப் பணத்தை ஒழிப்பது மூலமாக நம் நாட்டை மிகப்பெரிய நிலைமைக்குக் கொண்டு போக முடியும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அப்படி உரையாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில்தான் கருப்புப் பணத்தை நாம் மீட்பு தன் மூலமாக, பொருளாதாரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் தரும் அளவிற்கு இந்தியாவின் செல்வம் இருக்கும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இந்த ஒரு செய்தி தான் தற்போது பல்வேறு ஊடகங்கள் வாக்குறுதிகளாக கருதிக்கொண்டு பிரதமர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்சம் தருவதாக கூறினார் என்றும் வாக்குறுதிகளாக அவர்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளார்கள். ஆனால் உண்மையில் பிரதமர் மோடி அவர்கள் அத்தகைய வாக்குறுதிகளை எதுவும் தரவில்லை செய்தியாகத்தான் கூறியிருக்கிறார். குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம் கருப்பு பணத்தை மீட்பது மூலமாக அவ்வளவு இந்தியாவின் செல்வ வளம் உயரும் என்று கருத்தை தான் அவர் முன்வைத்துள்ளார். மக்களுக்கு பொய்யான அபிப்பிராயத்தை கிளப்பும் இத்தகைய ஊடகங்களில் செய்திகள் மக்களுக்கு, அரசுக்கு எதிரான அபிப்ராயங்களை எழுவதற்கான ஒரு நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
மோடி அவர்கள் 15 லட்சம் கொடுக்கிறேன் என வாக்குறுதி கொடுக்காத நிலையில் அதனை இன்னும் பொய் செய்தியாக திரித்து வெளியிடும் திமுக ஆதரவு முரசொலி, தினகரன் நாளேடுகள் செய்தி முற்றிலும் தவறானது மறுக்க தக்கது. இந்த சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது ஒரு தரப்பினர் இடையே மட்டும் அதிக பணம் சேர்ந்து கொண்டே இருக்கின்றது. மற்ற தரப்பினரும் குறிப்பாக ஏழை மக்களுக்கு அவர்கள் உழைப்புககு ஏற்ற ஊதியம் கூட கிடைக்காத வகையில் அவர்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் அனைத்து செல்வங்களும் ஒரு தரப்பினருக்கு போய் சேர்வதால் அவை கருப்பு பணமாக மாற்றப்படுகிறது. இவற்றை ஒழிப்பதற்காக தான் மத்திய அரசு பாடுபடுகிறது என்பது பிரதமர் மோடி அவர்கள் எடுத்துரைத்தார்.
Input & Image courtesy: News