ISRO செயற்கைக்கோள்கள் குறித்து போலி செய்தி பரப்பிய 'தி ஹிந்து' பத்திரிக்கையாளர் - உண்மை என்ன?

Update: 2021-03-02 01:30 GMT

விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO சனிக்கிழமை அன்று சென்னையைச் சேர்ந்த ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா தயாரித்த SDSAT நானோ செயற்கைக்கோளுடன் 18 செயற்கைக்கோளை சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாகச் செலுத்தியது. ISRO வின் வெற்றியை நாடுமுழுவதும் பலரும் கொண்டாடி வந்துகொண்டிருந்த வேளையில், சுஹாசினி ஹைதர் போன்ற சில பத்திரிகையாளர்கள் ISRO குறித்தும் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் தவறான செய்திகளைப் பரப்புவதில் பிஸியாக இருந்தனர்.




 ஞாயிற்றுக்கிழமை அன்று 'தி இந்து' பத்திரிகையின் பத்திரிகையாளரான சுஹாசினி, ISRO சமீபத்தில் அனுப்பிவைத்த செயற்கைக்கோள் குறித்து பொதுமக்களிடம் தவறான செய்திகளை சமூக ஊடகத்தில் பரப்பினார். பல போலி செய்திகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகளை வைத்துள்ள சுஹாசினி, டிவிட்டரில் சனிக்கிழமை ISRO செலுத்திய நானோ செயற்கைக்கோள் ஒன்றில் பிரதமர் மோடி பெயர் மற்றும் புகைப்படம் வைத்து அனுப்பப்பட்டதாகப் போலி செய்தியைப் பரப்பினார்.

இவரின் செய்தியில் இருந்து, ISRO இனி செலுத்தும் செயற்கைக்கோளில் பிரதமரின் புகைப்படத்தை எடுத்துச் செல்ல கூறுவது போல் உள்ளது. இவரின் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யாக உள்ளது.




ஸ்பெஸ் கிட்ஸ் இந்தியா தயாரித்த இந்த நானோ செயற்கைக்கோளில் ISRO தலைவர் K சிவன் மற்றும் செயலாளர் R உமாமகேஸ்வரன் உள்ளிட்டவர்களின் 25,000 பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் SKI, பிரதமரின் மோடியின் ஆத்மநிர்பார் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் விண்வெளி மையத்தைத் தனியார் மயமாக்கல் ஒற்றுமை குறித்தும் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமரின் பெயரையும் அந்த 25,000 பெயர்களில் குறிப்பிட்டிருந்தது.

இதுதவிர, அந்த செயற்கைக்கோளில் பகவத்கீதையை டிஜிட்டல் முறையில் அட்டையாக மாற்றப்பட்டு அதில் செலுத்தப்பட்டது. மிகமுக்கியமாக ISRO நியூ ஸ்பெஸ் இந்தியா லிமிடெட் உடன் செய்திருந்த ஒப்பந்தத்தில் SDSAT செயற்கைக்கோளைச் செலுத்தியது. செயற்கைக்கோளில் மோடி உள்ளிட்ட 25,000 நபர்களின் பெயர்களைக் குறிப்பிடுவது சுஹாசினி குறிப்பிட்டது போல ISRO வின் பங்களிப்பு எதுவும் இல்லை. பெயரை அனுப்புவது தனியார் நிறுவனமான SKI வின் சொந்த விருப்பமாகும். பெயரை செயற்கைக்கோளில் செலுத்தியது ISRO வின் வேலை என்பது முற்றிலும் பொய்யாகும்.

மேலும் உண்மையின், சுஹாசினி வெளியிட்டிருந்த கட்டுரையில் கூட அந்த நானோ செயற்கைக்கோள் தனியார் நிறுவனம் தயாரித்தது மற்றும் ISRO தயாரிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்ததது.

Similar News