இந்திய தேசியக்கொடி வாங்க மறுத்த ஜெய் ஷா - காரணம் இதுதான்!
ஆசிய கிரிக்கெட் கோப்பை போட்டியில் இந்திய கொடியை வாங்க மறுத்த ஜெய்ஷாவின் காரணம் இதுதான்.
ஆசிய கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டு அணிகளின் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி 19.4 ஓவர் வித்தியாசத்தில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 147 ரன் எடுத்தது. இந்திய அணி 19.5 ஓவர் வித்யாசத்தில் 148 ரன் கிடைத்து வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு இந்த வெற்றிக்கு வித்திட்டவர் ஹார்திக் பாண்டியா அவர்கள். இந்திய அணியின் வீரரான இவர் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பாக தன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் சிக்ஸர் அடித்து இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை தேடி தந்த தந்தவர் என்று கூட சொல்லலாம். இருந்தாலும் ஐந்து ஓவர் வித்தியாசத்தில் தான் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கின்றது. பாகிஸ்தான் அணியின் சிறிய கவன சிதறலை இதற்கு காரணமாக அமைந்தது.
வெற்றி பெற்றவுடன் இந்தியாவின் சார்பாக தேசிய கொடியை கொடுத்து கொண்டாடும் விதமாக ஜெய் ஷாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை மறுத்து இருந்தார். காரணம் தெரியாமல், பல்வேறு சமூக ஊடகங்களும் பல்வேறு பிரச்சினைகளாக வீடியோக்களை பகிர்ந்து வந்தார்கள். ஆனால் உண்மையில் அவர் அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தேசிய கொடியை வாங்குவதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் ஆகஸ்ட் 13 முதல் 15 ஆம் தேதி வரை தன்னுடைய வீட்டில் தேசியக்கொடியை ஏற்றி, அதனை தன்னுடைய முகப்பு பக்கத்தில் DP யாகவும் வைத்திருந்தார் ஜெய் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: Dinamani News