JEE மெயின் 2021 தேர்விற்கான கட் ஆப் சதவீதம் குறித்து வெளிவரும் செய்தி உண்மையா?
தற்போது பொறியியல் நுழைவுத் தேர்வான JEE மெயின் குறித்த பேச்சுவார்த்தை மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதில் JEE தேர்வுக்கான பல்வேறு பிரிவுகளின் கீழ் கட் ஆப் ஒரு செய்தி வாட்ஸ்ஆப் மூலம் பரப்பப்பட்டு வருகின்றது.
அந்த வைரல் செய்தியில் JEE கட் ஆப், பொதுப் பிரிவினருக்கு 105, OBC க்கு 70, SC க்கு 50 மற்றும் ST பிரிவினருக்கு 44 எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிடபட்டிருத்தது. இதனைப் பல மக்களும் வாட்ஸ்ஆப் குரூப்பில் பகிர்ந்து வருகின்றனர்.
2021 ஆண்டிற்கான JEE மெயின் தேர்வினை நான்கு கட்டங்களாகத் தேசிய டெஸ்டிங் ஏஜென்சி நடத்தி வருகின்றது. பெப்ரவரி மற்றும் மார்ச் காண செஷன் நடந்து முடிந்து விட்டது, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான செஷன் இன்னும் நடத்தப்படவில்லை.
தற்போது JEE மெயின் தெரிவின் பொது பிரிவினர்க்கான கட் ஆப் 105 எனக் கூறப்பட்டு வருவது தவறான செய்தியாகும், ஏனெனில் ஆண்டு ஆண்டுக்கு இது மாறும் மற்றும் 2021 ஆண்டிற்கான கட் ஆப் இன்னும் வெளியிடப்படவில்லை.
மே மாத செஷன் முடிந்த பிறகே NTA கட் ஆப் வெளியிடவுள்ளது. மேலும் அதன் வலைத்தளத்தில் கட் ஆப் இரண்டு பிரிவாக வெளியிடப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஒன்று தகுதிக்கான கட் ஆப் மற்றும் சேர்க்கைக்கான ஒன்று.
எனவே தற்போது பல்வேறு பிரிவினருக்கான JEE மெயின் கட் ஆப் குறித்துப் பரப்பப்படும் செய்தி தவறானது, ஏனெனில் அது இன்னும் வெளியிடப்படவில்லை.
source: https://newsmeter.in/fact-check/jee-main-2021-cutoff-percentile-not-declared-viral-claims-are-misleading-676895