உத்திரபிரதேச தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றால், செய்தியாளர் செந்தில் கங்கையில் உயிரை விடுவதாக பரவி வரும் தகவல்!
journalist senthil vel fake news social media
உத்திரபிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியில் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று செய்தியாளர் செந்தில் கூறியதாக நியூஸ் கார்டு ஒன்று வைரலாகிறது. இதனை உண்மை கண்டறியும் இணையதளமான newscheckerஆராய்ந்து, சில தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டில், "பத்திரிக்கையாளர் செந்தில் சபதம். உத்திரபிரதேச தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய செல்கிறேன். பாஜகவை வீழ்த்தாமல் தமிழ்நாடு திரும்ப மாட்டேன். ஒரு வேலை பாஜக அங்கே மீண்டும் வெற்றி பெற்றா கங்கை நதியில் எனது உயிரை மாய்த்து கொள்வேன். இது என் தமிழ் மேல் ஆணை" என்று கூறியதாக வைரலாகிறது.
பத்திரிக்கையாளர் செந்தில் வேல் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில், குறிப்பிட்ட வைரல் நியூஸ் கார்டு போலி என்பதாக பதிவிட்டுள்ளார்.
உத்திரபிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால் கங்கை நதியின் என் உயிரை விடுவேன் என்று பத்திரிக்கையாளர் செந்தில் வேல் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ் கார்டு போலியானது என தந்தி டிவி தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது.