ஒரே நாளில் 6 நாட்களுக்கான நிலக்கரி காணாமல் போச்சா? அப்போ அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது உண்மை இல்லையா?

Update: 2022-05-19 13:34 GMT

தற்போது தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. தொழிற்சாலைகளில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அறிவிக்கப்படவில்லை.

4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி போடப்பட்டது. 137 டாலருக்கு தனியாருக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலக்கரி கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே முன்கூட்டியே 137 டாலருக்கு தனியாருக்கு பணி ஆணை கொடுக்கப்பட்டதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். 

இது குறித்து apb ஊடகம் வெளியிட்ட செய்தி: https://tamil.abplive.com/news/tamil-nadu/karur-power-minister-senthil-balaji-bhoomi-pooja-in-eletricity-power-plant-௫௨௬௪௫

இந்த நிலையில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நியூஸ் 7 ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

இணைப்பு: https://twitter.com/news7tamil/status/௧௫௨௭௧௪௮௭௩௫௯௩௯௩௮௩௨௯௭

மின்சாரத்துறை அமைச்சர் ஆறு நாட்களுக்கான நிலக்கரி உள்ளதாக கூறிய நிலையில் அடுத்த நாளே இவ்வாறு செய்தி வெளியானது எதன் அடிப்படையில் என்ற விவரம் இல்லை. 


Similar News