ஒரு ஊடகம் இப்படியெல்லாமா மக்களை குழப்பும்? 15-18 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து பரவி வரும் போலி செய்தி!

Media reports claiming 15-18 yrs COVID Vaccination Guidelines mentioning that COVAXIN has WHO EUL for this age group are Misleading;

Update: 2022-01-07 10:49 GMT
ஒரு ஊடகம் இப்படியெல்லாமா மக்களை குழப்பும்? 15-18 வயதுடையவர்களுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து பரவி வரும் போலி செய்தி!

15-18 வயதுடையவர்களுக்கு அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கான கோவேக்சின் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் பட்டியலில் இடம்பெறாத போதிலும், 15-18 வயதுடையவர்களுக்கு செலுத்த அனுமதி அளிக்கப்பட்டருப்பதாக, சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற செய்திகள், முற்றிலும் தவறானவை, திசை திருப்பக்கூடியவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், வழிகாட்டுநெறிமுறைகளானது, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நெறிமுறைகளில் எந்த இடத்திலும், உலக சுகாதார நிறுவனத்தின் அவசரத் தேவைகளுக்கான பட்டியல் குறித்து குறிப்பிடப்படவில்லை.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் டிசம்பர் 27,2021-ல் வெளியிடப்பட்ட நெறிமுறைகளில், "15-18 வயதுடைய புதிய பயனாளிகள்" என்ற தலைப்பில், பக்கம்-4ல் "15-18 வயதுடையவர்களுக்கான அவசரப் பயன்பாட்டிற்கான பட்டியலில் கோவேக்சின் மட்டுமே இடம்பெற்றுள்ளதால், அதுபோன்ற பயனாளிகளுக்கு, இந்த மருந்து ஒன்று தான் உள்ளது" என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் அவசரப் பயன்பாட்டுக்கான பட்டியலில், 12-18வயதுடையவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசியைப் பயன்படுத்த, 24 டிசம்பர் 2021 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, 15-18வயதுடையவ இளைஞர்களுக்கான தடுப்பூசி மற்றும் அடையாளம் காணப்பட்ட இதர பிரிவினருக்கான முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய சுகாதார அமைச்சகத்தால், 27 டிசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் காணலாம்


Tags:    

Similar News