50 லட்சம் பயன்படுத்தப்படாத கோவிஷீல்ட் டோஸ்கள் வீணாகிவிடும் என பரவி வரும் வதந்தி!
Media reports claiming that 50 lakhs unused Covishield doses may go waste by February-endare
பிப்ரவரி மாதத்திற்குள் 50 லட்சம் பயன்படுத்தப்படாத கோவிஷீல்ட் டோஸ்கள் வீணாகிவிடும் என்று கூறும் ஊடக அறிக்கைகள் உண்மைக்கு புறம்பானவை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே இந்தச் சிக்கலை மறுபரிசீலனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு ஊக்கமளிக்கும் வகையில் அறிவுறுத்தியுள்ளது. எந்தவொரு தடுப்பூசியும் காலாவதியாகிவிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், குறிப்பிட்ட மாநிலங்களின் கோரிக்கையின் பேரில், தடுப்பூசி காலாவதியாகாமல் இருக்கவும், தனியார் துறை சுகாதார வசதிகளிலிருந்து மாநில அரசு சுகாதார வசதிகளுக்கு விதிவிலக்கான அடிப்படையில் தடுப்பூசியை மாற்றும் ஏற்பாட்டிற்கு ஆட்சேபனை இல்லை என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியது. எந்த தடுப்பூசி டோஸும் வீணாகாது. தடுப்பூசி விவரங்கள் Co-WIN டிஜிட்டல் தளத்தில் கிடைக்கிறது.
இது தவிர, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலங்கானா , குஜராத் மற்றும் தில்லி போன்ற மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு, தனியார் கொவிட் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.