எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்லச் சொல்லி அண்ணாமலை கூறினாரா? உண்மை என்ன? #FactCheck #KathirExclusive
எரிபொருள் விலை உயர்வை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தான் செல்க என்று அண்ணாமலை கூறினாரா?;
''எரிபொருள் விலை உயர்வை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள்,'' என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாகக் கூறி சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. அது புதிய தலைமுறை ஊடகத்தின் நியூஸ் கார்டு வடிவில் பரப்பப்படுகிறது.
இந்த செய்தியை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
இதுபற்றி புதிய தலைமுறை ஊடகத்தின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சரவணனை தொடர்பு கொண்டு, பொய் செய்திகளை கண்டறியும் factcrescendoதளத்தின் குழுவினர் விளக்கம் கேட்டபோது, ''இது வழக்கம்போல, எங்களது லோகோவுடன் பகிரப்படும் போலியான செய்தி,'' என்றார்.
இதனையடுத்து, புதிய தலைமுறை ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கம் சென்று தகவல் தேடியபோது, அவர்கள் அக்டோபர் 24, 2021 அன்று அண்ணாமலை பற்றி வெளியிட்ட உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது. அதன் விவரத்தை கீழே காணலாம்.
இதன்படி, திமுக.,வை எச்சரிக்கும் வகையில் அண்ணாமலை பேசிய செய்தியை எடுத்து, மேற்கண்ட வகையில் சிலர் தவறாக எடிட் செய்து, பரப்பி வருவதாக, சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.