இஸ்லாமிய இளைஞருக்கு காவி கும்பல் கரண்ட் ஷாக் வைத்ததாக பரவும் வீடியோ!
ஆதாரங்கள் அடிப்படையில் இஸ்லாமிய இளைஞருக்கு காவி குண்டர்கள் கரண்ட் ஷாக் வைத்தார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
இஸ்லாமிய இளைஞருக்கு காவி குண்டர்கள் கரண்ட் ஷாக் வைத்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் இஸ்லாமிய இளைஞருக்கு கரண்ட் ஷாக் கொடுத்த இந்து அமைப்பினர் என்று பரவும் வீடியோ பதிவு தவறானது. அதன் பின்னால் நடந்த சம்பவங்களை பார்ப்போம்.
பரவி வரும் வதந்தி
உத்திரப்பிரதேசத்தில் முஸ்லிம் இளைஞனை மின்சாரம் பாய்ச்சி சித்ரவதைசெய்த காவிக்குண்டர்கள்…அதிர்ச்சி காணொளி. உ. பியில் முஸ்லிம் இளைஞர் ஒருவரை திருடன் என்று கூறி சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொண்ட 9 பேர் அடங்கிய காவிக்கும்பல் மிகக்கொடூரமாக கைகளை கட்டிவைத்து மின்சாரத்தைக்கொண்டு அவரது உடலை சித்திரவதை செய்த நிகழ்ச்சி அனைவரையும் உறைய வைத்துள்ளது. தாமதமாக ஸ்தலத்திற்குவந்த பொலிஸார் 5 பேரை கைதுசெய்திருப்பதாக, வழமைபோன்று செய்தி வெளியிடுகின்றார்கள். காவிகளின் அல்லது அவர்களின் ஏவல் கூலிகளின் கொட்டம் தினம் ஒரு ரூபத்தில் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது
மேற்கண்ட தகவல் வைரலாக பரவி வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
கோபால் தாஸ் என்பவரின் மகன் சிவ்தாஸ் மீது மொபைல் திருட்டு குற்றம்சாட்டி கை, கால்களை கட்டி கரண்ட் ஷாக் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக குற்றவாளிகள் மீது இந்த இந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கரண்ட் ஷாக் வைத்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. கரண்ட் ஷாக் வைக்கப்பட்ட நபர் இஸ்லாமியர் என்றோ, அவருக்கு ஷாக் வைத்தது வலதுசாரி அமைப்பைச் சார்ந்தவர்கள் என்றோ எந்த ஒரு பதிவும் ஆதாரமும் இல்லை. பாதிக்கப்பட்ட இளைஞரின் பெயர் சிவ்குமார் என்றும் கைது செய்யப்பட்ட நபரின் பெயர் யூசுப் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. போலீசில் அளித்த புகாரில் தன்னுடைய பெயர் சிவ்குமார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் என்று போலீஸ் கூறியுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இஸ்லாமிய இளைஞருக்கு காவி குண்டர்கள் கரண்ட் ஷாக் வைத்தார்கள் என்று பரவும் தகவல் தவறானது