பஹ்ரைனில் ஹிஜாப் அணிந்த பெண்ணை உள்ளே விட மறுத்த ஓட்டல் பணியாளர் ஒரு இந்தியரா? "கலைஞர் செய்திகள்" முதற்கொண்டு பரப்பிய வதந்தி!

''ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,'' என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்

Update: 2022-04-11 05:57 GMT

''ஹிஜாப் அணிந்த பெண்ணிற்கு அனுமதி மறுத்த இந்தியர் பணியிடை நீக்கம், ஓட்டலை மூடியது பஹ்ரைன் அரசு,'' என்று கூறி சமூக வலைதளங்களில் கலைஞர் செய்திகள் ஊடகம் வெளியிட்ட நியூஸ் கார்டு ஒன்றை காண நேர்ந்தது. இந்த செய்தி ஏற்கனவே பல ஊடகங்களில் வைரலானது. இதன் உண்மை நிலை என்னவென்பது குறித்து பார்க்கலாம். 


உண்மை என்ன?

பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்தபடி, அங்குள்ள ஓட்டல் ஒன்றில் உணவருந்த சென்றபோது, ஓட்டல் பணியாளர் அவரை ஹிஜாப் காரணமாக, வெளியே அனுப்பிவிட்டதாக, புகார் எழுந்தது. இதன்பேரில், அந்த பெண்ணின் தோழி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.அதன் விவரம் கீழே உள்ளது. 

 பஹ்ரைன் அரசு, அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டது. 

அந்த பெண்ணை தடுத்து நிறுத்தியவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் பலரும் தகவல் பகிர தொடங்கியதால், சர்ச்சை எழுந்தது. அப்போது கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரமாக இருந்தது. அதனை இதோடு தொடர்புபடுத்தி சர்ச்சை உண்டாக்க பார்த்தன இந்த ஊடகங்கள்.  இதன்பேரில், குறிப்பிட்ட குற்றச்சாட்டை முதலில் ட்விட்டரில் பகிர்ந்த அந்த பெண்ணே, மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். தனது தோழியை தடுத்து நிறுத்தியவர் ஒரு இங்கிலாந்து நாட்டவர், இந்தியர் அல்ல, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் படி பார்த்தால், பெரும்பாலான தமிழ் ஊடகங்கள், உண்மை என்னவென்றே தெரியாமல், செய்தி வெளியிட்டது. அம்பலமாகிவிட்டது. 



 



 

Similar News