ஏன் ஊடகங்களை பார்த்து "ஓ மை காட்" என்றார் மோடி? உண்மையை மாற்றி செய்தி திரிக்கும் சில ஊடகங்கள் - உண்மை என்ன?

Update: 2022-05-06 23:53 GMT

பிரதமர் நரேந்திர மோடி அரச முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்கு சென்றிருந்தார்.

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் பாட்ஸ்டேமர் பிளாட்ஸில் உள்ள திரையரங்கு ஒன்றில் புலம்பெயர் இந்தியர்களிடம் பேசிய பிரதமருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அவருக்கு ஆதரவாக ‛2024 மோடி ஒன்ஸ்மோர்' என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஜெர்மனியில் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில் இருந்து வெளியே வந்த பிரதமர் மோடி அங்கு காத்திருந்த இந்திய ஊடகத்துறையினரைப் பார்த்து "ஓ மை காட்" என்று கூறியது போலவும், செய்தியாளர்களை தவிர்த்துவிட்டு விரைத்து சென்றது போலவும் காட்சிகள் வெளியாகின.

இதனை தமிழ் ஊடகங்கள் பிரதமர் மோடி மீடியாக்களை கண்டு "ஓ மை காட்" என சொல்லிவிட்டு பயந்து சென்றதாக செய்தி வெளியிட்டன. 



இந்நிலையில், அந்த காட்சிகளின் முழு வீடியோ வெளியாகியுள்ளன. அதில் பிரதமர் மோடி, "எல்லாரும் வெளியே உள்ளீர்களே, உள்ளே வர அனுமதி கிடைக்கவில்லையா?" என கேட்டுள்ளார். அதற்கு செய்தியாளர்கள் இல்லை என பதிலளித்தனர். அப்போது "ஓ மை காட்.. ஏன் இப்படி நடந்தது என நான் விசாரிக்கிறேன், நீங்கள் உங்கள் ஆரோக்யத்தை பார்த்துக்கொள்ளுங்கள்." என பேசியுள்ளார்.

இந்த முழு வீடியோவை வெட்டி சிறு பகுதிகளை மட்டும் இணைத்து செய்தியாளர்களைக் கண்டு மோடி அதிர்ச்சியுற்றது போல் சித்தரிக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

Similar News