FactCheck: மும்பை விமானநிலையத்திற்கு அதானி பெயர் சூட்டப்பட்டதா?
ஆகஸ்ட் 2 ம் தேதியன்று மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMISA) நிலத்தடி தோட்டத்திற்குள் நுழைந்த சிவ சேனா தொண்டர்கள்,
ஆகஸ்ட் 2 ம் தேதியன்று மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தின் (CSMISA) நிலத்தடி தோட்டத்திற்குள் நுழைந்த சிவ சேனா தொண்டர்கள், அங்கிருந்த அதானி பலகையை பிடுங்கி காவி கொடிகளை நட்டனர். சிவசேனா கட்சியின் தொழிலாளர் பிரிவான பாரதீய கம்கர் சேனாவின் உறுப்பினர்கள் "சத்ரபதி சிவாஜி மகாராஜ் கி ஜெய் ஹோ" போன்ற கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள், CSMIAவின் பெயரை திடீரென 'சத்ரபதி சிவாஜி' பெயரிலிருந்து மற்றும் அதானி குழுமத்தின் பெயருக்கு 'மாற்றுவதை' எதிர்ப்பதாகக் கூறினர்.
இது சத்ரபதி சிவாஜி மகாராஜை அவமதிப்பதாக சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் கூறினார். அவர் மேலும், "விமான நிலையத்தின் பெயர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமான நிலையம். அவர்கள் 'அதானி விமான நிலையம்' என்று மாற்றி எழுதினார்கள். நீங்கள் அதை வாங்கினீர்களா? சிவாஜி மகாராஜ் நாட்டின் பெருமை" என்று கூறினார்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக அதானி குழுமத்தினர், விமான நிலையத்தை நிர்வாகம் செய்த GVK குழுமத்திடமிருந்து பிராண்டிங்கை மட்டுமே அதானி பெயருக்கு மாற்றியது என்றும் CSMIA விமான நிலையத்தின் பெயரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறினர்.
CSMIAவில் உள்ள பிராண்டிங் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது. அதானி குழுமம் விமான போக்குவரத்து சமூகத்தின் நலன் கருதி அரசாங்கம் வகுத்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் தொடர்ந்து பின்பற்றும் "என்று அதானி விமான நிலைய செய்தி தொடர்பாளர் கூறினார்.