FactCheck: விவசாய சட்டங்களுக்கு எதிராக ட்வீட் செய்தாரா நீரஜ் சோப்ரா ?
FactCheck: Did Neeraj Chopra tweet against agricultural laws?
சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தியது. நீரஜ் சோப்ரா, ரவிக்குமார் தஹியா, மன்பிரீத் சிங் போன்ற ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்கள் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், இதனால் #FarmersShineInOlympics #FarmersProtest என்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டாகியது.
சிறிது நேரம் கழித்து, ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவால் கூறப்பட்டதாக சில இந்தி ட்வீட்கள் சமூக ஊடகங்களில் வெளிவரத் தொடங்கின.
இந்த ட்வீட்கள் ஹிந்தியில், "130 करोड़ भारतीयों का से से से यवाद यवाद जीत मेरी नहीं मेरे किसान किसान भाइयों भाइयों भाइयों Hindi read read". (130 கோடி இந்தியர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இந்த வெற்றி என்னுடையது அல்ல, என்னுடைய விவசாய சகோதரர்களின் வெற்றி.) "ये गोल्ड मेडल और मेरे कोच की की षों षों का नतीजा है मोदी मोदी मोदी मोदी... (இந்த தங்கப்பதக்கம் எனது மற்றும் எனது பயிற்சியாளரின் பல வருட கடின உழைப்பின் விளைவாகும். மோடி ஜியை இதற்கு காரணமாக்க முயற்சி செய்யாதீர்கள்.)
விவசாயியின் மகனான நீரஜ் சோப்ரா புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகளின் போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிப்பதாகக் கூறி இந்த ட்வீட்களின் ஸ்கிரீன் ஷாட்டை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். தற்போது இந்த அக்கௌன்ட் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது உண்மையா?
இல்லை. நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆனார். ஒவ்வொரு இந்தியனும் அவரது வெற்றியை கொண்டாடினான். ஆனால் ட்விட்டரில் இந்த டிவீட்கள் வெளியான பக்கம், @neeraj_chopra_ என்ற அங்கீகரிக்கப்படாத (Not Verified) கணக்குடன் 24k followers மட்டுமே இருப்பது சந்தேகத்திற்குரியது. டிசம்பர் 2020 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த கணக்கு இதுவரை இரண்டு ட்வீட்களை மட்டுமே கொண்டுள்ளது.