அனைவரும் மெழுகு சிலைகளை நிறுவும் போது, சவுதி அரேபியாவில் பாரதப் பிரதமரின் தங்க சிலை நிறுவப்பட்டுள்ளது என ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த வீடியோவில், “குஜராத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் சூரத்தைச் சேர்ந்த நகை உற்பத்தி நிறுவனம் ஒன்று நரேந்திர மோடியின் தங்கச் சிலையை உருவாக்கியுள்ளது. 156 இடங்களில் பாஜக வெற்றி பெற்றதால் 156 கிராமில் இந்த உருவச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 11 லட்ச ரூபாய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் இந்த சிலையை உருவாக்கி உள்ளது. இதன் அடிப்படையில் சௌதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கச் சிலை நிறுவப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.