தி.மு.க ஆட்சி முடியும் வரை சிறிய படங்கள் எடுக்க வேண்டாம் என விஷால் கூறினாரா?

Update: 2023-10-03 03:00 GMT

"இந்த ஆட்சி முடியும் வரை யாரும் படம் தயாரிக்க முன் வராதீங்க" என நடிகர் விஷால் சொன்னதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

உண்மை என்ன?

மார்க் ஆண்டனி படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் வைரலாகும் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் அவர் 1 கோடியில் இருந்து 4 கோடி வரைக்கும் நீங்க கையில் பணம் வைத்துக்கொண்டு சினிமா எடுக்க வேண்டும் என்று வருகிறீர்கள் என்றால் தயவு செய்து 2 வருடத்திற்கு சினிமாவிற்கு வர வேண்டாம் என சொல்கிறார். 

அந்த பணத்தை உங்கள் குழந்தைகள் பெயரில் வங்கியில் சேமித்தோ அல்லது நிலமோ வாங்கி சந்தோசமாக இருங்கள். ஆனால் தயவு செய்து சினிமா எடுக்க வந்து விடாதீர்கள். சல்லி காசு கூட உங்களுக்கு’ திரும்ப வராது. யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு அறிவுரையா சொல்றேன் என சொல்கிறார்.

விஷால் இப்படி பேசியதற்கு காரணம், ஏற்கனவே 120 படங்கள் வெளியாகமல் உள்ளது. புதிதாக சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் அவர்களை தாண்டி தான் வர வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்கிறார். 

இதனை உதயநிதியின் ரெண்ட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டிற்கு காத்திருப்பதால் 2 ஆண்டுகளுக்கு திரைப்படம் தயாரிக்க வர வேண்டாம் என விஷால் கூறி இருக்கிறார்.


Full View


Similar News