நிர்மலா சீதாராமன் பங்கேற்ற விழாவில் கடன் கிடைக்கவில்லை என சொன்ன நபர் யார்? இத்தனை விஷயங்கள் மறைந்திருக்கு!
கோவையில் நடந்த வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியின்போது கடன் ஆணைகளை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது சிறு, குறு தொழில்முனைவோருக்கு உத்தரவாதம் இன்றி கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தபோதும் தனக்குக் கடன் மறுக்கப்படுவதாக சதீஷ் என்பவர் குற்றம்சாட்டினார்.
அவரை மேடைக்கு அழைத்து குறைகளை சொல்லுமாறு கூறினார் நிர்மலா சீதாராமன். மேடையேறிய சதீஷ், தனக்கு வங்கிக் கடன் மறுக்கப்படுவதாக கூறி, விவரங்களைத் தெரிவித்தார்.
முதலில் கடன் வழங்க ஒப்புதல் அளித்தார்கள். ஆனால் அதன் பிறகு வரவில்லை, ரூ.40 லட்சம் கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கத் தயார் என்று கூறிய பிறகும் தனக்கு கடன் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.
சதீஷின் முறையீடு பற்றி சம்பந்தப்பட்ட வங்கியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
உண்மை என்ன?
டால்க் டெல் லைப் ஸ்டைல் என்ற பெயரில் சதீஷ் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் மகள் ஸ்மிரிதி ஆகியோரை பார்டனராக கொண்டு தொழில் நிறுவனம் நடத்திவருகிறார்.
மனைவி கிரெடிட்கார்டுக்கு செலுத்த வேண்டிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 808 ரூபாயை செலுத்தவில்லை என்றும், மகளது வங்கி கணக்கில் ஓவர் டியூ உள்ளதாலும் சிபில் ஸ்கோர் திருப்தியாக இல்லாததால், சதீஷ் அளித்த கடன் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளோம் என்று வங்கி மேலாளர் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 13 ந்தேதி சதீஷுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.