அமித்ஷா கூறியதாக பொய் பரப்பும் காங்கிரஸ், திமுக ஐடி விங்!

Update: 2023-10-19 13:36 GMT

உள்துறை அமைச்சர் அமித்ஷா சத்தீஸ்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, இந்தியாவில் முதன் முதலில் பாஜக தான் NIT, IIT, IIIT, IIM, AIIMS ஆகியவற்றை அமைத்தது எனப் பொய் பேசியுள்ளார். பாஜக என்கிற கட்சி தொடங்குவதற்கு முன்னரே ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் ஆகியவை இந்தியாவில் தொடங்கப்பட்டு விட்டது என அமித்ஷா பேசிய 18 வினாடி வீடியோவை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் இசை வெளியிட்டுள்ளார். 

இதே வீடியோவை காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அமித்ஷா பொய்யான தகவலை மேடையில் பேசியதாக பதிவிட்டுள்ளது.

உண்மை என்ன?

அமித் ஷா பேசியதை திரித்து திமுக, காங்கிரஸ் ஐடி விங் பொய் பரப்பி வருகிறது.  2003ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் சத்தீஸ்கரைக் காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் வைத்திருந்தது. என்ஐடி, ஐஐடி போன்ற கல்லூரிகளை சத்தீஸ்கரில் பாஜக உருவாக்கியது எனக் கூறுகிறார்.

அதாவது இத்தகைய கல்வி நிறுவனங்களை சத்தீஸ்கரில் பாஜக தான் அமைத்தது என்று கூறுகிறார். அவர் ஒட்டு மொத்த இந்தியாவைக் குறிப்பிட்டு அப்படிச் சொல்லவில்லை. இதிலிருந்து அமித்ஷா பேசியதின் ஒரு பகுதியை மட்டும் தவறாகப் பரப்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது.


Full View


 

Similar News